search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர் மரணம்"

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறப்பு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் ராஜ்போரா பகுதியில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பணியில் இருந்த போலீசார் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சமீர் அகமது மிர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார். சக போலீசார் அவரை மீட்டு மருத்துவமனை  கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.  
     
    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #MilitantsAttack
    ஜோலார்பேட்டையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பலியானார்.

    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் மசூதி பின்புற பகுதியை சேர்ந்தவர் சுக்காராம் மகன் அசோக் குமார் (வயது29). சென்னை தண்டையார்பேட்டையில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    நேற்றிரவு பைக்கில் ஜோலார்பேட்டையில் இருந்து ஆண்டியப்பனூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு அசோக்குமார் சென்று கொண்டிருந்தார். பக்கிரிதக்கா மசூதி அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான வேலூர் சலவன்பேட்டை அம்மனாங்குட்டையை சேர்ந்த குமரேசன் மகன் வினோத் (32) என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரையில் இன்று காலை வயரில் இரும்பு கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து போலீஸ்காரர் பலியானார்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீனியப்பா நகரைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 28). இவர், நெடுஞ்சாலை வாகன ரோந்து காவலராக பணிபுரிந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற ஜீவா, இன்று காலை வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். வீட்டு முன்பு கிடந்த நீளமான இரும்பு கம்பியை அப்புறப் படுத்துவதற்காக எடுத்தார்.

    அப்போது வீட்டின் அருகில் உள்ள உயர் அழுத்த மின் கம்பி மீது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி உரசியது. இரும்புக் கம்பியை பிடித்துக் கொண்டிருந்த ஜீவா மீது கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜீவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான ஜீவாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இவரது மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். #Tamilnews

    ×